ஒரு அழகான கனவு...! (உண்மையே)

ஆற்றங்கரையில்
அமர்ந்து
தனிமையில்
நான்
அழுதுக் கொண்டிருந்தேன்.

அப்போது
ஆற்றில்
ஒரு தேவதை
தோன்றினாள்.

'ஏன் அழுகிறாய்?'
எனக் கேட்டாள்.

'என் இதயம்
தொலைந்துவிட்டது'
என்றேன்.

'தேடித் தரட்டுமா?'
என்றாள்.

'சரி'
என்றேன்.

அந்த தேவதை
ஆற்றுக்குள்
மூழ்கினாள்.

சிறிது நேரத்தில்
ஆற்று நீரெல்லாம்
ரத்தமாக
மாறியது.

நீரிலிருந்து
எழுந்தாள்
தேவதை.

அவள் கையில்
ஒரு இதயம்.
'இதுவா?'
எனக் கேட்டாள்.

'இதுவே தான்'
என்றேன்.

உடனே
அந்த தேவதையின் முகம்
கோபத்தால்
சிவந்தது.

'நீ ஒரு
பேராசைக்காரன்,
திருடன்,
பிறர் பொருள் மேல்
ஆசைப் படுபவன்.
இது உன் இதயமல்ல,
என் இதயம்'
என்றது.

நான் சொன்னேன்:
'உன் இதயத்தை
வெளியே
எடுத்துவிட்டு
இன்னும் நீ
உயிரோடு இருக்கிறாய்.
உனக்கு தெரியாமல்
உனக்காக
உனக்குள்
இப்போது
துடித்துக் கொண்டிருப்பது
என் இதயம்.'
என்று.

இதைக் கேட்டு
சிவந்திருந்த அவள் முகம்
வெளுத்து விட்டது.

'இதயம் இல்லாமல்
தவிக்கும்
எனக்கு
உன் இதயத்தை
கொடுக்க மாட்டாயா?'
எனக் கேட்டேன்.

தேவதை
அழுதுவிட்டாள்.

சிறிதும் தயங்காமல்
அழுதுக் கொண்டே
அவள் இதயத்தை
நீட்டினாள்.

நானும்
அதை வாங்க
என் கைகளை
நீட்டினேன்.

நீட்டினேன்...
நீட்டினேன்...
நீட்டிக் கொண்டே
இருக்கிறேன்...
அவள் இதயத்தை
வாங்க
முடியவில்லை.

அவளும்
நீட்டுகிறாள்...
நீட்டுகிறாள்...
நீட்டிக் கொண்டே
இருக்கிறாள்.
அவளால்
கொடுக்க முடியவில்லை...!

(பாலமுருகன்)

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!