நிறம் மாறும் பொழுதில்
நிறைந்திருக்கும் நதியில்
கரை நானல் இடுக்கில்
சிக்குன்ட நீர் குமிழி நீ

ஒரு வார்த்தை வரத்துடிக்கும்
உன் அழகை சொல்லிடவே - ஆனால்
அண்டமெல்லம் திரண்டு வந்து
கண் இரண்டை மறைப்பதேனோ?

புள்ளி மான் பொட்டு வைத்து
பொழிர் மலர் சோலையென
உன் கூந்தல் நறுமணக்க
அசைந்தாடும் கொடி போலே

சித்திரை தேர் வீதியிலே
சிலையென நடந்து வரும்
செந்தாமரை பதத்திலே
கொலுசொலியும் இசையமைக்க

கூர் விழிப் பார்வையாலே
என் மனதை குத்திவிட்டு
பருவம் வந்த நெற்ப்பயிராய்
நிலம் நோக்கி கடந்துசென்றாய் நீ

நீ நடத்தும் நாடகத்தில்
வட்டத்தின் முனை தேடும்
மாணவனாய் படிக்கிறேன்
உன் மனதை!!!!!!!!!

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!