Posts

Showing posts from April, 2011
இதயம் என்னும் தோட்டத்தில் காதல் எனும் பயிர் வளர்த்தேன்...! பயிரும் செழிப்பானது என் இதய கண்ணீரில்...!
என்னவளே! உன் வரவுக்காக தினம் தினம் காத்திருக்கும் - எனக்கு உன் வரவுதான் வேண்டாம்... -ஆனால் உன் வார்த்தையையாவது தர இயலாதா?
இதயம் என்னும் கூட்டில் சிறிதாக அவள் பரிசங்களை சிறைப்படுத்தினேன்...! அவளே என் இதயம் என்பது தெரியாமல்...!
என்னிடம் பேசுவதற்காக யோசித்து வைத்திருந்த அத்தனை வார்த்தைகளையும் மறந்து… உடலுக்குள் மெல்லிய நடுக்கம் பிறக்க… உயிருக்குள் சில்லென்று புயல் அடிக்க… இதயம் நான்கு மடங்காய் துடிக்க… என்ன செய்வதென தெரியாமல்… ஒரு சுகமான பதற்றத்தோடு எனக்கு முன்னால் வந்து நிற்கிறாய் நமக்கான முதல் சந்திப்பில்…
Image
உண்மை சொல்ல கண்கள்..! பொய் சொல்ல பெண்கள்...! அதை நம்ப ஆண்கள்..! உண்மை சொன்ன கண்கள் சிறை அறையில்...! பொய் சொன்ன பெண்கள் மணவறையில்....! நம்பிய ஆண்கள் கல்லறையில்........!!!!!
உயிரற்ற என் உடலில் உயிராய் உட்புகுந்து உலவ விட்டிருக்கும் - அந்த உலக தேவைதை யார்? என்று எண்ணித் தவமிந்தேன்...! வரமும் கிடைத்தது...! - ஆனால் அவள் வரவுதான் கிடைக்கவில்லை...!
முகமூடி அணிந்தால் முகம்தான் தெரிந்திடுமா? கண்ணாடி பார்த்தால் அகம்தான் புலப்படுமா? சொன்னால் மட்டும் காதல் புரிந்திடுமா? சொல்லவில்லையென்றால் காதல் தான் செத்து விடுமா? காதல் நினைவிருந்தால் மட்டும் போதுமா? கண்ணில் கனவிருந்தால் தான் காதலா? நான் காதல் கொள்வது தான் தவறா? இல்லை என்னை காதல் கொள்ளும் பெண்தான் பாவமா? இவ்வாறு விடை தெரியாமல் விழிக்கிறேன்...! பாதை தெரியாமல் நடுவில் நின்று உழறுகிறேன்...!
உன்னை காதலிப்பதால் தான் நான் கவிதை எழுதி கொண்டிருப்பதாய் என எல்லோரும் சொல்கிறார்கள் நான் காதலிப்பதே ஒரு கவிதையை தான் என உணராமல்....

Just Feel it :-

நாள் முழுக்க பேசிக்கொண்டு பக்கத்திலேயே இருந்த பிறகும் விடைபெறும் சமயத்தில் என் கைகைளை இறுகப் பற்றிக்கொள்வாயே… அந்த ஒருநொடியில் ஒட்டுமொத்தமாய் கரைந்துபோனது இதுவரை கடந்த அத்தனை நிமிடங்களும் ! இன்னும் கொஞ்சநேரம் இப்படியே கையை பற்றிக்கொண்டு இருப்பாயா என மனம் ஏங்கினாலும்… “சரி நேரமாயிடுச்சு கிளம்பட்டுமா… “ என கேட்கும் என் பொய்யான உதடுகளை என்ன செய்ய ! ~பாலமுருகன்
நீ இமைக்கும் போது உன்னிடம் கண்ணாய் வாழ்கிறேன் எனக்கேன்..? இந்த கண்கள்! நீ சுவாசிக்கும் போது உன்னிடம் காற்றாய் வாழ்கிறேன் எனக்கேன்..? இந்த சுவாசம்! நீ பேசும் போது உன்னிடம் வார்த்தையாய் வாழ்கிறேன் எனக்கேன்..? இந்த வார்த்தை! நீ உறங்கும் போது உன்னிடம் கனவாய் வாழ்கிறேன் எனக்கேன்..? இந்த கனவு! நீ நினைக்கும் போது உன்னிடம் ஜீவனாய் வாழ்கிறேன் எனக்கேன்..? இந்த ஜீவன்! நீ போகும் போது உன்னிடம் நிழலாய் வாழ்கிறேன் எனக்கேன்..? இந்த நிழல்! நீ வாழும் போது உன்னிடம் வாழ்க்கையாய் வாழ்கிறேன் எனக்கேன்..? இந்த வாழ்க்கை! ~பாலமுருகன்
மறந்து போன மாயம் என்னவோ..! என்னவளே---- உன் விழி கண்டு என் விழி முடாமல் உன்னை தேடிய--- நெஞ்சம் இங்கு உன் வருகின் நாளை எண்ணியே....
எனக்கு தெரியும் நீ விரும்புவது என்னை அல்ல என் கவிதைகளை என்று. ஆனால் உனக்குத் தெரியுமா? உன்னை விரும்புவது என் கவிதைகள் அல்ல நான் தான் என்று.. தபால்காரனுக்குக் கூட என் மீது இறக்கம் இருக்கிறது. எவர் வீட்டுக் கடிதத்தையாவது என் வீட்டில் போட்டு தற்காலிக மகிழ்ச்சியாவது தருகிறான். நீ தான் இரக்கமில்லாமலே இருக்கிறாய். எனக்கு வரவேண்டிய கடிதத்தை இன்னும் எழுதத் தொடங்காமல்........ எழுது எழுது.. எனக்கொரு கடிதம் எழுது.. என்னை நேசிக்கிறாய் என்றல்ல. நீ வேறு எவரையும் நேசிக்கவில்லை என்று.... ~பாலமுருகன்
உன் பார்வை என்னுள் கிறுக்கியதில் இருந்தே, எதை எதையோ கிறுக்குகிறேன் என் டைரியில்... அத்தனையும் உன்னைப் போல, அழகாகவே முகம் காட்டுகிறது காதல் எனும் கவிதையாய்.... ~பாலா
சிற்பியால் செதுக்கப்படும் கல்.. சிற்பமாகும் ஒருநாள்.. துன்பங்களால் செதுக்கப்படும் நமது வாழ்வும்.. சிறப்பு காணும் அந்த அழகிய சிற்பம் போல...!
ஒருநாள்.. உனைப் பார்த்தேன்.. மறுநாள்.. மனம் வியந்தேன். சிலநாள்.. ...இரசித்திருந்து.. பலநாள் விழித்திருந்தேன்..-நம் மணநாள் வேண்டுமென்று. மனதால் சிரித்திருந்தேன் – உன்திரு மணநாள் கேள்விப்பட்டேன்..-என் மரணநாள் தேடிநின்றேன்.. ~பாலமுருகன்
கவிதை சரியாக எழுத வராதபோது என்னுடன் இருந்தாள். கவிதை நன்றாக எழுத வந்ததும் ஏன்? எனைவிட்டு சென்றாள் . கவிஞனாக்க வேண்டும் என்பதற்காகவே சந்தித்துப் பிரிந்தாள் ~பாலா
உன்னை சுற்றும் நட்சத்திரங்களில் நானும் ஒருவன் தான்... ஆனால் ...... எனக்கு தெரிந்த ஒரே "நிலவு" நீ மட்டும் தான்...!!
உன் பார்வை என்னுள் கிறுக்கியதில் இருந்தே, எதை எதையோ கிறுக்குகிறேன் என் டைரியில்... அத்தனையும் உன்னைப் போல, அழகாகவே முகம் காட்டுகிறது காதல் எனும் கவிதையாய்....

உன் நினைவாள்...!

அன்பாய் கரம் பிடித்து மடியில் தலை சாய்த்து நீ முடி கோதும் போதினிலே உன் மொழி கேட்டு என் மொழி வாழ நம் உரையாடும் விளையாடல் மனம் காணும் ஓர் சுக நாடலே உன் முகம் காணும் கண நேரம் மனம் காணும் இதம் போதுமே... குழல் சூட நல் மலர் கொண்டு தினம் வந்து என் கரம் கொண்டு நான் சுடும் வரம் வேண்டுமே... உன் கரம் பற்றி நிலவோடு நடை போடும் சுகம் போதும் அகிலங்கள் துசாகுமே... விழியோடு விழி பேசும் மொழி காண மனம் நாளும் இனம் காணா தவிப்பாகும் இதை எழுத இயலாததே... உன் கோபம் நான் தணிக்க என் கோபம் நீ தணிக்க இது ஊடல் இளைக்காது எந்நாளும் சளைக்காது அன்பாலே உருவானதே.... உன் அருகில் நான் அமர்ந்து நீ பறிமாறும் அழகோடு உணவோடு உன்னோடு உட்கொள்ளும் கணம் போதுமே... மரணமும் பின்வாங்குமே...

துளைந்து போனேன் நான்...!

Image
முதல் முறை உன் குரல் கேட்ட.. அந்த நிமிடங்களில்! என்னை மறந்து உன் குரலில் தொலைந்தே போனேன்..! காற்றலை வழி வந்து என் காது வழி வீழ்ந்து உன் குரல் தொடுத்த இனிமையான- அன்பான பண்பான வார்த்தைகள் என்னில் புகுந்து என்னை உனது வசமாக்கியது..! உன் குரல் மட்டும் கேட்காமல் போய் இருந்தால் என் வாழ்வின் அர்த்தம் புரியாமலே போய் இருக்கும்..! பிரம்மன் படைப்பின் சிறப்பு படைப்பு நீயடா! வர்ணிக்க வார்த்தைகள் தேடி அலையும் பேதை நானடா.! உன் அன்பு சிறையில் சிறைப்பட்டு எனது மனம்! விடுதலை பெற விருப்பமில்லாமல்.. உன்னுடன் இறுதிவரை ஆயுள் கைதியாக வாழ அடம் பிடிக்கிறது...! என் உறவென உனை மாற்றினாய்! விழி வழியே உன் உருவம் நகல் எடுத்து நித்தமும் பார்க்க வைத்தாய்...! மொத்தத்தில்..என் இனியவனே உன்னிடம் அடிமைப்பட்டு வாழ்ந்திட ஏங்குது.. இந்த பெண்ணின் மனம்..
நிறம் மாறும் பொழுதில் நிறைந்திருக்கும் நதியில் கரை நானல் இடுக்கில் சிக்குன்ட நீர் குமிழி நீ ஒரு வார்த்தை வரத்துடிக்கும் உன் அழகை சொல்லிடவே - ஆனால் அண்டமெல்லம் திரண்டு வந்து கண் இரண்டை மறைப்பதேனோ? புள்ளி மான் பொட்டு வைத்து பொழிர் மலர் சோலையென உன் கூந்தல் நறுமணக்க அசைந்தாடும் கொடி போலே சித்திரை தேர் வீதியிலே சிலையென நடந்து வரும் செந்தாமரை பதத்திலே கொலுசொலியும் இசையமைக்க கூர் விழிப் பார்வையாலே என் மனதை குத்திவிட்டு பருவம் வந்த நெற்ப்பயிராய் நிலம் நோக்கி கடந்துசென்றாய் நீ நீ நடத்தும் நாடகத்தில் வட்டத்தின் முனை தேடும் மாணவனாய் படிக்கிறேன் உன் மனதை!!!!!!!!!

கண்ணி என்பேன்...!

Image
காரிகையின் காதலை நம்பி, காத்திருந்தேன் கன காலம்! காணாமல் போய் விட்டாள் - என் காதலை பொய்யாக்கி விட்டு.... காலம் செய்த கோலம் என்று, பொய்யுரைக்க மாட்டேன்...! காதலி செய்த நாடகம் என்று, மெய்யுரைக்கவும் மாட்டேன்...! மாறாக........ என்னோடு வாழ அவளுக்கு.., அதிஷ்டம் இல்லை என்பேன்..! என் புன்னகையின் அழகை, ரசிக்க தெரியாதவள் என்பேன்..! என் கவிதைகள் அவள் மேல் கொண்ட, எண்ணற்ற காதலை புரிந்து கொள்ளாதவள் என்பேன்..! என் ஆண்மையின் மென்மையினை.., உணர முடியாதவள் என்பேன்..! என் குழந்தை உள்ளத்தை..., அறிந்து கொள்ளத்தெரியாதவள் என்பேன்..! கண்ணீர் வடிக்கும் என் இதயத்தை...கூட, கண்டு கொள்ள முடியாத குருடி என்பேன்..! அவள் கன்னி அல்ல,, கன்னி அல்ல... என்னை தாக்க வந்த.... கண்ணி என்பேன் கண்ணி என்பேன்..!!!
Image
கொழுத்து நான் நின்றாலும் உன் கண்ணிற்கு மட்டும் மெலிந்து போனதேனோ கருமை என்று எல்லோருடைய நாவும் என்னை நலம் காணும் போது அள்ளி அனைத்து கிள்ளி உரைக்கும் உன் நாவு எனை அழகுஎன்பதேனோ புசிக்கும் வயிற்ருக்கு பசிக்காவிட்டாலும் படையெடுக்கும் உன் கரம் எனக்காக உணவுதேடுவதேனோ அனலாய்க் காய்ச்சல் வந்தாலும் எனை அணைத்துக்கொண்டு உன் விரல் என் முடிக்கு மகுடி வாசிப்பதேனோ சினம் வந்து தடம் மாறும் உன் குணத்தால் தடம் பாதிக்கும் உன் விரல் என் முதுகில் . வேறு யாரும் எனை முறைக்கும்போது கடிக்கும் பார்வையால் தடிக்கும் வார்த்தையால் எனக்கு கவசமிடுவதேனோ இனம் புரியாத பாசத்தால் இனம் காக்கும் உன் அன்பு இனிப்பதேனோ இனிக்கும் தேனும் உனைப் பற்றி உரைக்கும்போது முடிவாய் வருவதேனோ....... <>பாலமுருகன்<//?

தோழியே.......!

தோழியே! உன்னால் மட்டும் எப்படி முடிந்தது என்னை மறப்பதற்கு முடிந்தால் எனக்கும் சொல்லிவிடு நானும் உன்னை மறப்பதற்கு - இல்லையேல் உன் நினைவுகளினாலேயே மரித்துவிடுவேன் ஆம்! நான் மரிக்கும் வரை உன் நினைவுகள் என்னை விட்டு மறையாது.

மௌனம்

தினம் எத்தனை எத்தனை .... கொஞ்சல்கள் ..... சின்ன சின்ன சிணுங்கல்கள் ...... மெல்லமாய் நடந்து ..... தீராத பாதைகள் ...... நொடிக்கு நொடி பகிர்ந்த ..... சொல்ல முடியாத ..... சோகங்கள் ...... இவை எல்லாம் ...... கேட்டன ???????? நொடி பொழுதாவது !!!! இனி சந்திப்போமா ???????? மௌனம் மட்டுமே ...... மௌனமாய் எட்டி நின்றது !!!!!!!!!

காதல் வந்ததால் :-

பார்க்கும் தூரத்தில் காதலி பரிதவிக்கும் இதயம் பசுமையான அவள் உருவம் பக்கத்தில் இருந்தால்-தினம் அல்லல்படும் மனசு. விக்கலும் இல்லை தாகமுமில்லை தவிப்புக்குள் அடங்கும் ஏக்கம் குற்றம் ஏதும் செய்யாமல் வார்த்தைகள் எல்லாம் மௌனத்திற்கு சிறைபடுகின்றன. விழிமூடித்திறக்கும் இடைவெளியில் காணும் உருவம் உறங்கியபோது உறவாடுகிறது. காதல் வந்ததால் கனவு வந்தது கற்பனை வந்தது கவிதை வந்தது இருப்பதை இழந்துவிட்டு காதலுக்காக காத்திருக்கும் காதலன்…….. ~பாலா

உன் முகம்...!

சில்லென்ற காற்றோடு மெலிதாய் தூறிக்கொண்டிருக்கும் மெல்லிய மழைத்துளிகளை… வாஞ்சையோடு உள்ளங்கைகளில் ஏந்திக்கொண்டிருக்கும் இந்த ஈர நிமிடத்தில் எதேட்சையாய் கவனித்தேன்… என் உள்ளங்கைக்குள் உருள்கின்ற துளிகளில் உன் முகம் தெரிவதை… ~பாலமுருகன்

"மழை"

'கொளுத்தும் கோடையில் சில்லென்ற மழை எப்போதும் பாராது செல்லும் நீ திரும்பி புன்னகைத்தாய் அடாசு ஜோசியர்கள் சொன்ன தினப்பலனும் பலித்தது அருகிலிருந்த குழந்தைக்கு என்னைப் பார்த்துக் கொண்டே கொடுத்தாய் ஒரு முத்தம் குருபெயர்ச்சியோ சனிப்பெயர்ச்சியோ நல்லதாய் நடக்கிறது மெட்ரோ ரயிலுக்கு நான்நிற்கும் இடத்தில் வந்து நீ நின்று கொண்டிருக்கிறாய் இன்றைக்கு நாளைக்கும் நாளை மறுநாளும் இன்னும் சில நாட்களுக்கும் உன் விழிநாடகம் தொடருமென்று புரிகிறது வானிலைஅறிக்கையில் இன்னும் மழை தொடருமென்கிறார்கள்' ~பாலமுருகன்