நீ இமைக்கும் போது
உன்னிடம் கண்ணாய்
வாழ்கிறேன் எனக்கேன்..?
இந்த கண்கள்!

நீ சுவாசிக்கும் போது
உன்னிடம் காற்றாய்
வாழ்கிறேன் எனக்கேன்..?
இந்த சுவாசம்!

நீ பேசும் போது
உன்னிடம் வார்த்தையாய்
வாழ்கிறேன் எனக்கேன்..?
இந்த வார்த்தை!

நீ உறங்கும் போது
உன்னிடம் கனவாய்
வாழ்கிறேன் எனக்கேன்..?
இந்த கனவு!

நீ நினைக்கும் போது
உன்னிடம் ஜீவனாய்
வாழ்கிறேன் எனக்கேன்..?
இந்த ஜீவன்!

நீ போகும் போது
உன்னிடம் நிழலாய்
வாழ்கிறேன் எனக்கேன்..?
இந்த நிழல்!

நீ வாழும் போது
உன்னிடம் வாழ்க்கையாய்
வாழ்கிறேன் எனக்கேன்..?
இந்த வாழ்க்கை!

~பாலமுருகன்

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!