நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!
நீ சொல்லும் சொல்லை உடனே கேட்க்கும் பேதை ஆண் நான்!!!உன் சொல் தட்டாதவன் என்பதை விட உன்மீது அளவில்லா அன்பு கொண்ட பாசப்பைத்தியமடி நான் ........ உந்தன் அன்பு என்னை ஆழும் அந்த இறுதி நொடி வரை உள்ளுக்குள் அழுதாலும் வெளியே சிரித்தமுகத்துடனேயே இருப்பேன் என்னுள் நீ வாழ்வதால் ...... காலமெல்லாம் காத்திருப்பேன் ஒரு நாள் வருவாய் என்று ......இத்தனை நாள் பிரிவின் துன்பத்திற்கு இறைவனிடம் கேட்பது ஒன்று தான் .......உன்னை பார்த்த அந்த நாள் என் ஆயுளின் இறுதி நாளாக வேண்டும் ........ நீ இல்லா வாழ்க்கை இனித்திடுமா? அப்புறம் ஏன் வாழ்கிறேன் என்று பார்கிறாயா? உன்னை காணவே ..... உன்னை காணாது எந்தன் உடல் தீயில் இட்டாலும் வேகாது .......... நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...! பாலமுருகன்.
Comments
Post a Comment