நீ சொல்லும் சொல்லை உடனே கேட்க்கும் பேதை ஆண் நான்!!!உன் சொல் தட்டாதவன் என்பதை விட உன்மீது அளவில்லா அன்பு கொண்ட பாசப்பைத்தியமடி நான் ........ உந்தன் அன்பு என்னை ஆழும் அந்த இறுதி நொடி வரை உள்ளுக்குள் அழுதாலும் வெளியே சிரித்தமுகத்துடனேயே இருப்பேன் என்னுள் நீ வாழ்வதால் ...... காலமெல்லாம் காத்திருப்பேன் ஒரு நாள் வருவாய் என்று ......இத்தனை நாள் பிரிவின் துன்பத்திற்கு இறைவனிடம் கேட்பது ஒன்று தான் .......உன்னை பார்த்த அந்த நாள் என் ஆயுளின் இறுதி நாளாக வேண்டும் ........ நீ இல்லா வாழ்க்கை இனித்திடுமா? அப்புறம் ஏன் வாழ்கிறேன் என்று பார்கிறாயா? உன்னை காணவே ..... உன்னை காணாது எந்தன் உடல் தீயில் இட்டாலும் வேகாது .......... நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...! பாலமுருகன்.
என்னிடம் பேசுவதற்காக யோசித்து வைத்திருந்த அத்தனை வார்த்தைகளையும் மறந்து… உடலுக்குள் மெல்லிய நடுக்கம் பிறக்க… உயிருக்குள் சில்லென்று புயல் அடிக்க… இதயம் நான்கு மடங்காய் துடிக்க… என்ன செய்வதென தெரியாமல்… ஒரு சுகமான பதற்றத்தோடு எனக்கு முன்னால் வந்து நிற்கிறாய் நமக்கான முதல் சந்திப்பில்…
பெண்ணின் கண்களை படைத்தான்... அதில் காந்தத்தை வைத்தான்... ஆணை படைத்தான் அவர்களின் இதயம் இரும்பென வைத்தான்.. பெண்களின் கண்கள் தூண்டில்... ஆண்களின் இதயம் அதில் மீன்கள்... நம் விழி மூடினால் உலகம் இருளும்.. பெண்கள் விழி திறந்தாலோ ஆண்களின் உலகம் மட்டும் இருளும்... பெண்களின் கண்கள் அகல் விளக்கு... வெளிச்சமும் தரும்... விட்டில் பூச்சியாய் நம்மை வீழ்த்தவும் செய்யும்... ஆணினமே எச்சரிக்கை..!!! எதில் வீழ்ந்தாலும் மீளலாம்... பெண்களின் கண்களை தவிர...!!
Nice
ReplyDelete